தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27) காலை 10.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கூட்டத்தில் தமிழரசுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேந்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,  முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜா, சட்டத்தரணி வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஜெனீவா விவகாரம், தற்போதைய அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.