வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு

விசாக்களை ரத்து செய்வதற்கான அதிகபட்சமான அதிகாரத்தை பெறுவதற்காக ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத்திருத்தம் தொடர்பாக  மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இச்சட்டத்திருத்தம் தொடர்பில் வழக்கறிஞர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள சட்டத்திருத்தத்தின் மூலம், ஆஸ்திரேலியாவைச் சேராத வெளிநாட்டவர் ஒருவர் வன்முறை தொடர்பான அல்லது போதை மருந்து தொடர்பான குற்றங்களில் குற்றவாளியாக கருதப்பட்டால் அவரது விசாவை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை ஆஸ்திரேலிய அரசுக்கு இச்சட்டத்திருத்தம் வழங்குகிறது. சம்பந்தப்பட்ட வெளிநாட்டவருக்கு எவ்வளவு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளமலேயே விசா ரத்து செய்வதற்கான அதிகாரம் இச்சட்டத்திருத்தம் மூலம் அரசுக்கு கிடைக்கிறது.

இந்த புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதா (Strengthening the Character Test) 2021 மூலம் குணநலன் அடிப்படையிலான சோதனையை கூடுதலாக்கி விசா ரத்தை கருத்தில் கொள்ள வைப்பதற்கான கூடுதல் அதிகார பலத்தை ஆஸ்திரேலிய அரசுக்கு வழங்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.