பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் வழைச்சேனையில் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா அவர்களின் 2021ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கழகங்கள், பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும்  செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கழகங்கள் மற்றம் பொது அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம்இன்றைய தினம் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்திற்கு ஒலிபெருக்கி மற்றும் கதிரைகள், வினாயகபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு கதிரைகள், கண்ணகி கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்திற்கு கதிரைகள் என்பன பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.