ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் மலேசியாவுக்குள் நுழைய முயன்ற படகுகள் திருப்பி அனுப்பப்பட்டன

பிலிப்பைன்ஸ் பக்கமிருந்து 42 ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் மலேசியாவின் சாபா கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற இரண்டு படகுகளை மலேசிய பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

அவர்கள் மலேசிய கடல் பகுதியிலிருந்து சர்வதேச கடல் பகுதிக்குள் நகர்த்தும் நடவடிக்கையை மலேசிய படையினர் மேற்கொண்டிருக்கின்றனர்.

வான்வெளி கண்காணிப்பின் போது மூன்று படகுகள் தென் பட்டதாகவும் பின்னர் ஒரு படகு சர்வதேச கடல் பகுதி நோக்கிச் சென்று தப்பியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், இரண்டு படகுகளில் நடத்தப்பட்ட சோதனையில் முறையான பயண ஆவணங்களின்றி 14 ஆண்கள், 10 பெண்கள், மற்றும் 18 குழந்தைகள் உள்ளிட்ட 42 பேர் இருந்ததை மலேசிய படையினர் கண்டறிந்திருக்கின்றனர்.

மலேசிய எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் எல்லை கடந்த குற்றங்களை தடுக்கவும் கொரோனா பரவலை ஒழிக்கவும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெறும் என மலேசிய கூட்டு செயல் படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அப்துல் கரீம் அகமது தெரிவித்திருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.