புளியந்தீவில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

(சுமன்)

30 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் புளியந்தீவு பகுதியில் வசிக்கும் 30 வயக்கு மேற்பட்டடோருக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் செற்திட்டம் இன்றைய தினம் மட்ஃவின்சன் உயர்தர தேசியப் பாடசாலை மண்டபத்தில் சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

புளியந்திவு தெற்கு, புளியந்திவு கிழக்கு, புளியந்தீவு மேற்கு, புளியந்தீவு மத்தி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதன்போது வருகை தந்து தங்களுக்கான மூன்றாம் கட் தடுப்பூசியினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.