கோப்பாவெளி சமுர்த்தி வங்கி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் திறந்து வைப்பு!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக அரச சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்க்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட கோப்பாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில்  புதிய சமுர்த்தி வங்கி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.
புதிய சமுர்த்தி வங்கியை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சமுர்த்தி வங்கியின் ஊடாக  மங்களகம, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம் மற்றும் கித்துள் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1250 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.