மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு இராஜாங்க அமைச்சரினால் வழங்கிவைப்பு!

நீதி அமைச்சின் இழப்பீடுகளுக்குள்ளான அலுவலகத்தினால் இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு  இன்னல்களுக்குள்ளான நபர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு காசோலைகளை வழங்கிவைத்துள்ளார்.
இதன்போது கடந்த காலங்களில் இன்னல்களுக்குள்ளான ஆலயங்கள் மற்றும் நபர்களுக்காக 25,42,000  ரூபாய் நிதி காசோலைகளாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாதிப்பிற்குள்ளான 07 ஆலயங்களிற்கும், உயிரிழப்பிற்குள்ளான மற்றும் காயமடைந்த 14 நபர்களுக்கும் மேலும் சொத்துப் பாதிப்பிற்குள்ளான 9 நபர்களுக்கும் நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக
உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள், முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமக்கு நீண்டகாலமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் இந்த அரசாங்கம் மிக விரைவாக எமக்கு இக் கொடுப்பனவுகளை வழங்கியமைக்காக அரசாங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.