சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு கௌரவ பிரதமர் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்.

வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மஹா சமன் தேவாலய வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதி புத்தர் சிலை திறந்துவைப்பு மற்றும் முதலாவது மலர் பூஜை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் இன்று (28) இடம்பெற்றது.

இரத்தினபுரி ஸ்ரீ சுமனாராம விகாரஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய கரவிட உபனந்த தேரர், புதிய சமாதி புத்தர் சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புத்தர் சிலைக்கு முதலாவது மலர் பூஜை நிகழ்த்தினார்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய சமாதி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், அதற்கான நிர்மாணப் பணிகளை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் மேற்கொண்டிருந்தது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தரும், பொத்குல் ரஜமஹா விகாரை மற்றும் பெல்மதுல்ல ரஜமஹா விகாரை ஆகியவற்றின் உபய விகாராதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புண்ணிய நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய வணக்கத்திற்குரிய தேரர், புத்தசாசன அமைச்சு போன்றதொரு அமைச்சு அது தொடர்பிலான புரிதலை கொண்ட கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து பாராட்டு தெரிவித்து அனுசாசனம் நிகழ்த்தினார்.

கொடகவெல ஸ்ரீ மஹிந்த மஹா விகாராதிபதி, சியம் மஹா நிகாயவின் மல்வத்து பீடத்தின் சப்ரகமுவ மாகாண நீதிமன்ற சங்கநாயக்கர் கொம்பிடியே சுசீல தேரரும் இதன்போது அனுசாசனம் செய்தார்.

இந்நாட்டிவ் குளங்களும் தாதுகோபுரங்களும் மன்னர்களினாலேயே நிர்மாணிக்கப்பட்டன என்ற கலாசாரத்தை மாற்றி கௌரவ பிரதமர் அவர்கள் அண்மையில் அனுராதபுரத்தில் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தை நிர்மாணித்தார். இவ்வாறு பல புண்ணிய நிகழ்வுகளை மேற்கொள்ளும் நாம் எப்போதும் நேசிக்கும், நாம் எப்போதும் மதிக்கும் மற்றும் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எமது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மிகுந்த பலம் பெற பிரார்த்திக்கிறோம். இன்னும் மூன்று தினங்களில் பிறக்கவிருக்கும் 2022 ஜனவரி 01 திகதி முதல் இந்நாட்டை புதிய பாதையில் பயணிக்க செய்வதற்கு உங்களுக்கு பலமும் தைரியமும் கிடைக்கட்டும்! என ருவண்புரவில் எட்டு தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மஹாசங்கத்தினர் பிரார்த்திக்கின்றனர் என்று கொம்பிடியே சுசீல தேரர் குறிப்பிட்டார்.

சமாதி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்கள் இதன்போது கௌரவ பிரதமரினால் பாராட்டப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அதனை  தொடர்ந்து மஹா சமன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர், பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, அகில சாலிய எல்லாவள, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண சபையின் தவிசாளர் கஞ்சன ஜயரத்ன, சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் ரஞ்சித் பண்டார, சப்ரகமுவ மாகாண தலைமை செயலாளர் சுனில் ஜயலத், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி லொகுபோதாகம, சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே மீகார ஜயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.