ரயில் நிலைய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கும், ரயில் நிலைய அதிபர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்த நிலையிலேயே, போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் ரயில் பயண பற்றுச்சீட்டு விநியோக நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் கசுன் ஷாமர தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை