50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் சம்மாந்துறை உள்ளக வீதிகள்அபிவிருத்தி பணிகளை அஸ்பர் உதுமாலெப்பை ஆரம்பித்து வைத்தார்.

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ள சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மல்கம்பிட்டி 02, மல்கம்பிட்டி 03 ஏ, மல்கம்பிட்டி 07, மல்கம்பிட்டி 09, மதினாஉம்மா சந்தி ஆகிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் உத்தியோகபூர்வ அங்குராப்பண வைபகம்  (28) சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான அஸ்பர் உதுமாலெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுமார் 50 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நடைபெறவுள்ள இந்த அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ. கிதுர் முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி கே. குலமணி, கே. கோவிந்தசாமி, எஸ். நளீம் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
2.5 கிலோமீட்டர் நீளமுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இந்த திட்டத்தை சம்மாந்துறை பிரதேசத்தில் செயல்படுத்த முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக அமைந்த நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா உட்பட அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான அஸ்பர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.