சம்மாந்துறை பிரதேச சபையின் 74வது தேசிய சுதந்திர தின நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் 74வது தேசிய சுதந்திர தின நிகழ்வு முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிராத்தனையும் மரநடுகை வேலைத்திட்டம் மற்றும் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அஸ்வர் உதுமாலெவ்வை, என்.கோவிந்தசாமி, எம்.ரீ.பௌசுள்ளாஹ், ஏ.எம்.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.ஜிப்ரி, எஸ்.நளீம், எம்.எஸ்.சரீபா, எஸ்.எம்.எஸ்.நிலுவ்பா, கே.குலமணி, சம்மாந்துறை மேசன் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.வீ.ஹஸன், உலமாக்கள்;, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மேசன் தொழிலாளர் சங்க பிரதிநிகள், ஆட்டோ உரிமையாளர் சங்க பிரதிநிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.