தமிழக முதலமைச்சரை யாழ்ப்பாணம் அழைத்து மீனவர் பிரச்சனையை தீருங்கள்-அமைச்சரிடம் அங்கஜன் வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர்
தமிழ்நாட்டு முதலமைச்சரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து எமது மீனவர் பிரச்சனையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.17/02 வியாழக்கிழமை மயிலிட்டி துறைமுக இரண்டாம் கட்ட விரிவாக்கல் செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
எமது கடற்தொழிலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த நிலையில் கடற்தொழிலில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் எமது மீனவர் வாழ்வில் பாரிய துயரச் சம்பவம் ஒன்று நேர்ந்திருந்தது.நீண்ட அனுபவம் வாய்ந்த பொருத்தமான அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா விளங்குகிறார்.
எதிர்ப்பு அரசியல் மூலம் எதனையும் சாதிக்க இயலாது.தீர்வுத் திட்டமே எமக்கு அவசியம்.அதனூடாகவே எமது மீனவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இயலும்.தமிழ்நாட்டு முதலமைச்சர் இதுவரை யாழ்ப்பாணத்திற்கு வந்ததில்லை.ஆனால் எமது கடற்தொழில் அமைச்சர் அழைத்தால் நிச்சயமாக அவர் இங்கு வருகை தந்து மீனவர் பிரச்சனையை தீர்ப்பதோடு யாழ் மாவட்ட முன்னேற்றத்திற்கும் பங்களிப்பாற்ற முடியும்.இந்திய தூதரகம் ஊடாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு தீர்வுத் திட்டம் ஒன்றிற்கு வழிவகுக்க முடியும்.அதற்கு எனது ஒத்துழைப்பு நிச்சயமாக இருக்கும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.