முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால யாழ் வருகை.

சாவகச்சேரி நிருபர்
முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 20/02 ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக அவர் வருகை தரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதற்கான அழைப்பிதழ் 16/02 புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.அங்கஜன் எம்.பியின் தலைமையிலான குறித்த மாநாடு நெல்லியடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,கட்சியின் பிரமுகர்கள் பலர் வருகை தரவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.