ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு.

சாவகச்சேரி நிருபர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு 20/02/2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,கட்சியின் உப செயலாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனா,இராஜாங்க அமைச்சரும்,கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர,அமைச்சர்களான நிமல் சிறிபால டிசில்வா,துமிந்த திசாநாயக்க மற்றும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன்,சாந்த பண்டார உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.நெல்லியடி கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இம் மாநாட்டில் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.