மாவட்ட மட்ட இலக்கிய போட்டியில் காத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலய மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பெற்று சாதனை!!

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மாவட்ட ரீதியாக நடத்தப்படுகின்ற மாவட்ட இலக்கிய போட்டி தொடரில் முதல் இடங்கள் மூன்றினை பெற்று காத்தான்குடி அல்ஹஸனாத் வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டி தொடரில் கவிதை பாடல் போட்டி, ஆங்கில கையெழுத்துப் போட்டி, சிங்கள கையெழுத்துப் போட்டி ஆகியவற்றில் சிறுவர் பிரிவில் முதலாம் இடங்களை இவர்கள்  பெற்றுள்ளனர்.
அல்ஹஸனாத் வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்வி கற்கும் எம்ஏ. அஸீஹா என்ற மாணவி கவிதை பாடல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவரது நாட்டார் பாடல் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக  அரங்கேற்றப்பட்டமை சிறப்பம்சமாகும்.
அதேவேளை ஆங்கில கையெழுத்துப் போட்டி சிங்கள கையெழுத்துப் போட்டி ஆகியவற்றில் ஆர்எப். இர்ஷா என்ற மாணவி முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் இவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ரீதியில் முதலாம் இடங்களை பெற்றுக் கொண்ட இந்த மாணவிகளை பாடசாலை சமூகம் வெகுவாக பாராட்டுகிறது.
இதேவேளை இந்த மாணவர்கள் தேசிய ரீதியில் இடம் பெறவுள்ள  இலக்கிய போட்டி தொடரில் கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.