இலங்கையின் முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட கிராமமாக மணற்காடு-அங்கஜனின் கோரிக்கைக்கு அமைச்சர் செவிசாய்ப்பு.

சாவகச்சேரி நிருபர்
இலங்கையின் முதலாவது மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவள கிராமமாக வடமராட்சி-மணற்காடு பிரகடனப்படுத்தப்படும் என வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக 05/03 சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே துறைசார் அமைச்சர் குறித்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
மக்களால் அமைக்கப்பட்ட மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் அமைச்சரிடம் முன்வைத்த நிலையிலேயே அவர் அதனை ஏற்று மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவள கிராமமாக மணற்காட்டினை பிரகடனப்படுத்த உறுதியளித்திருந்தார்.
அத்துடன் பொதுமக்கள் அங்குள்ள சவுக்கு மரக் காடுகளை பாதுகாத்து வாழ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் மணல் அகழ்வு இடம்பெறா வண்ணம் காட்டினை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.