பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்ய முயற்சி.-அங்கஜன் எம்.பி குற்றச்சாட்டு.

சாவகச்சேரி நிருபர்

பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாப அரசியல் செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.04/03 வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

கீதநாத் காசிலிங்கம் என்பவர் பிரதமரின் பிரதிநிதியாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்,அபிவிருத்திக் குழுத் தலைவரின் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் முறையிட்டிருந்ததால் பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பாக பல ஊடக ஆசிரியர்களுடனும் நான் பேசினேன்.நியமனம் வழங்கப்பட்ட விடயத்தில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.ஆனால் பின்னால் சொல்லப்பட்டிருக்கும் வியாக்கியானங்கள் நியமனம் கிடைக்கப்பெற்ற குறித்த நபர் தொலைபேசி ஊடாக ஊடக ஆசிரியர்களுக்கு தெரிவித்தது.
பிரதமர் அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதியாக யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களில் பிரதமர் அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார். என்றும் இலகுவான ஓர் இணைப்பிற்காகவே இவரை நியமித்துள்ளோம் என்றும்
 அந்த நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு,எனக்கும் அதன் பிரதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை நான் வரவேற்கிறேன்.எமது மக்களுக்கு பல தேவைகள்,பல பிரச்சனைகள் காணப்படுகின்றன.நாம் அந்தப் பிரச்சனைகளை பிரதமருக்கு சொல்வதனை விட அவரது அலுவலகத்தில் இருந்து ஒருவர் வந்து பிரச்சனைகளை கேட்டறிவது நல்ல விடயம்.
ஆனால் அதற்கு அரசியல் நோக்கோடு சொல்லப்பட்ட வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறான முயற்சிகள் இதற்கு முன்னரும் அவரால் எடுக்கப்பட்டிருந்தது.மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நோக்கம் அவருக்கு இல்லை தன்னை அரசியல் ரீதியாக வளர்ப்பதற்கான நோக்கமே இது.பிரதமர் அலுவலகத்தைப் பயன்படுத்தி பிழையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.