ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 626 குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு உதவி காசோலைகள் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கிவைப்பு…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 576 கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குறைந்த வருமானம் பெறும் 626 குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) தங்காலை மாநகர சபை மண்டபத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் வீடமைப்பு உதவித் திட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட ஆரம்ப விழாவின் போது கௌரவ பிரதமரினால் குறியீட்டு ரீதியாக பத்து பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 588 புதிய வீடுகள், மிஹிந்து நிவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தமது பிள்ளைகளை பௌத்த சாசனத்திற்கு அர்ப்பணித்த குறைந்த வருமானம் பெறும் 14 பயனாளிகளுக்கும், ஊனமுற்ற அல்லது மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்கும் செவன உதவித் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கும் இதன்போது  காசோலைகள் வழங்கப்பட்டன.

உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 650,000 ரூபாவும், மிஹிந்து நிவஹன திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 650,000 ரூபாவும் செவர உதவித் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 750,000 ரூபாவும் வழங்கப்படுவதுடன், அதற்கான மதிப்பிடப்பட்ட செலவு 402 மில்லியன் ரூபாவாகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த வீடமைப்பு உதவித் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஷ,

மிகவும் இக்கட்டான காலப்பகுதியாக இருப்பினும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உங்களின் துன்பங்களைப் போக்கும் அதே வேளையில் உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கௌரவ பிரதமரின் எண்ணக்கரு மற்றும் தொலைநோக்கு அடிப்படையில் நிதியை வழங்கி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீடுகளை கட்டி மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியை அண்மையில் நாம் பார்த்தபோது, அங்கு கிராம சேவையாளர் பிரிவுகள் இருந்தன. ஆனால் அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு எவரும் இல்லை.

கடந்த பொதுத் தேர்தலில் குறிப்பாக பிரதமர் மீது நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தி, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய நீங்கள் வாக்களித்தீர்கள். கொவிட் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி போடுவதில் இலங்கையை முன்மாதிரியாக கொள்ளுமாறு இன்று உலகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மக்களை வாழவைத்த வரலாற்றை நோக்கும்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று யுத்தத்தை முற்றாக நிறுத்தி நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்தி உயிர்களை காப்பாற்றினார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குடிநீரின் தேவை அதிகமாக உள்ளது. வீரகெட்டிய மற்றும் ஏனைய பிரதேசங்களில் அப்போது நிலவிய பிரச்சினையை இனங்கண்டு பாரிய திட்டமாக நில்வலா திட்டத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிதி ஒதுக்கீடு செய்து அதனை ஆரம்பிக்க திட்டமிட்டோம். ஆனால் துரதிஷ்டவசமாக 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தத் திட்டம் முற்றிலுமாக நின்று போனது. இப்போது மீண்டும் ஒருமுறை அதைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

அடுத்த மூன்று வருடங்களுக்குள் இந்தப் பகுதிக்கு நில்வலா  அல்லது ஜின் கங்களை இரண்டிலிருந்தும் நீரை இப்பிரதேசத்திற்கு வழங்கி, சந்திரிகா குளத்திற்கு அந்நீரை எடுத்துச் சென்று உங்களுக்கு தேவையான குடிநீர், விவசாயம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம்.

கடந்த அரசாங்கம் நன்மை செய்திருந்தால் அதனை எங்களில் எவரேனும் தடுக்க மாட்டோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போம். கடந்த அரசாங்கம் என்ன செய்தது? 2015 இப்போதுதான் வந்தது எல்லாம் நின்று போனது. இவ்வாறானவர்களின் கவனக்குறைவான செயற்பாடுகளினால் தான் நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம், இவற்றை செயல்படுத்தினால் டொலர்கள் வரும்.

எனவே, இவை இன்று செயற்படுத்தப்படுகின்றமையை நீங்கள் காண்கிறீர்கள், ஆனால் சிரமங்கள் உள்ளன. முழு உலகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொறுமையுடன் எதிர்கொண்டால் இவற்றையெல்லாம் முறியடிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்  கௌரவ இந்திக அனுருத்த,

இந்த திட்டத்திற்கான முழு ஆலோசனையும், அனுசரணையும் மற்றும் வழிகாட்டுதலும் கௌரவ பிரதமரால் வழங்கப்பட்டது. இந்த வருடத்திற்கான எமது இலக்கு 30,000 வீடுகளாகும். இதுவரை 24000 வீடுகளின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு உண்மையான பிரச்சினைக்கு பதிலளிக்கும் அரசியல் பிரமுகர்கள் இந்த நாட்டில் மிகக் குறைவு. அவ்வாறு உண்மையான பிரச்சினைக்கு பதில் சொல்லக்கூடிய அரசியல் பிரமுகர் ஒருவர் இருப்பாராயின் அது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருவரே.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் மக்களுக்கு நியாயமானதை வழங்குபவர்கள் தற்போதைய பிரதமர் உட்பட இந்த ராஜபக்ஷர்களே தவிர வேறு யாரும் இல்லை என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நாம் பொறுப்புடன் கூறுகின்றோம்.

மேலும், மக்களின் கோரிக்கைகளை சரியாக நிறைவேற்றுபவர்கள் இந்த ராஜபக்ஷர்களே என்பதை  நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர்களான சமல்; ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ.சானக, இந்திக அனுருத்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஷ, தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.