புதுப்பிக்கத் தக்க சக்தி மூலம் வடக்கு அரச நிர்வாக தடையின்றி செயற்படுத்தப்படும்.. ஆளுநர் நம்பிக்கை.

வடக்கில் சோலர் சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி செயல்படுத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சரால் நாட்டின் பொது இடங்களில் மின்சார பயன்பாட்டை 20 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிஅமைச்சரால் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார பயன்பாட்டை சிக்கனமாக்குவதற்கு வடக்கு மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தொகுதி மூலம் பெறப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

ஆகவே எதிர்காலத்தில் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.