உள்ளூராட்சி மன்றங்களின் மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடைலான மதிப்பீட்டு அறிக்கையிடலும் !

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டமும் உள்ளூராட்சி மன்றங்களுக்கிடைலான மதிப்பீட்டு அறிக்கையிடலும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம். கமல் நெத்மினியின் நெறிப்படுத்தலில், நிந்தவூர் பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர்  எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று (09) நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகள் உட்பட 20 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்களென அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வு குறுந்திரைப்படம் ஒன்று வெளியீடு செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.