விளையாட்டு முற்றத்திற்கான உபகரணங்கள் கையளிப்பு.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபையின் உதயசூரியன் முன்பள்ளி விளையாட்டு முற்றத்திற்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு மற்றும் முன்பள்ளியின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு ஆகியன கடந்த 24/03 /2022 வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்களாக பவுலினா சுபோதினி தயாளரசன் மற்றும் தர்சன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர் உறவான இரட்ணம் ரவீந்திரன் என்பவர் முன்பள்ளியின் விளையாட்டு முற்றத்திற்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்த நிலையில்
விளையாட்டு முற்றத்தை சாவகச்சேரி நகரசபை தவிசாளர் சிவமங்கை இராமநாதன் திறந்து வைத்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.