கிழக்கு மாகாணத்திற்கு25 தாதிய உத்தியோகத்தர்களுக்கானஇணைப்புக் கடிதங்கள் வழங்கி வைப்பு!!

நாம் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளோம். எமது சேவைகளை திறன்பட வழங்க வேண்டும். அதற்கான ஊதியங்களை அரசாங்கம் எமக்கு வழங்குகின்றது. அதற்கெற்றாப்போல் எமது கடமைகளைச் செய்யவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மத்திய சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கி வைக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களில் 25 பேர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான இணைப்புக் கடிதத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு (04) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அவர் கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச பதவி வகிப்பவர்கள் சுறுசுறுப்பாகவும் சேவை மனப்பாங்குடனும், நேர்த்தியாகவும், மக்களிடம் இன்முகத்துடனும் தங்களது வேலைகளை செய்கின்ற போதுதான் அத்தொழிலுக்கு மகிமையும், உயர்வும் கிடைக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் ஒரு நிறுவனத்தில் சேவைபுரிகின்ற அரச ஊழியர்கள் சிறந்த சேவை மனப்பாங்குடனும், சிறப்பாகவும் தமது சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றபோதுதான் அந்த நிறுவனத்திற்கு வெற்றியும் உள்ளது.

மக்கள் சேவையை பெறுவதற்காக வரும்போது சேவை வழங்குனர்களின் நடத்தையை அவதானித்து தங்கள் மனதிலே சேவை வழங்குனர் குறித்து பதித்துக் கொள்கின்றனர். அவ்வாறான மனப்பதிவுகள் சிறப்பாக இருக்கும் போதுதான் சேவையாளன் வழங்குகின்ற சேவையில் திருப்தி கொள்கின்றார்கள். அந்த நல்லொதொரு மனப்பதிப்புக்களை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வின்போது சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், தி ட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.