பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலக வேண்டும் – விமல் வீரவன்ச அழைப்பு

பிரதமர் உட்பட அனைவரும் பதவி விலகி புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய புதிய நிர்வாகம், குறைந்தபட்சம் 4 பில்லியன் டொலர்களையாவது கண்டுபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தி சர்வதேச தரத்தை உயர்த்தியதன் பின்னர், சர்வதேச சந்தைக்கு மீண்டும் டொலர் கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.