கொழும்பில் கலவரம் வெடிக்கும் சூழல்!!

பல அடுக்கில் பாதுகாப்பு..கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறித்த பகுதியில் காவல்துறையினரும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ​​போராட்டக்காரர்கள் கலவரமாக நடந்து கொள்ளாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அரச தலைவர் செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால், பலாத்காரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம் என அவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் மேல் மாகாணத்தின் ஏனைய காவல்துறை பிரிவுகளில் இருந்து விசேட காவல்துறை குழுக்களும், இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்குவதற்காக கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.