பேராபத்தில் இலங்கை!! பகிரங்கமாக எச்சரிக்கை

தற்போதைய நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின்னர் தீவிரமடைந்து, பொருட்கள் வாங்க கூட பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றித்தில் இதனைத் தெரிவித்த அவர், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் முடக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“மத்திய வங்கி இன்று றிம்மிலேயே ஓடுகிறது. இந்தியாவின் உதவி இல்லை என்றால் எரிபொருளுக்கு என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும்.

எங்களுக்கு மே மாதத்துக்கு பின்னர் பணம் இல்லாமல் போகும். ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் மூடலாம். அவர்களிடம் பணம் இல்லை.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

பந்துல குணவர்தன கூறுவதைப் போன்று நிதி முகாமைத்துவ வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது” என்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.