அப்பாவி பிள்ளைகளின் உயிர்கள் மீது கை வைக்கும் எந்த மன்னராக இருந்தாலும் நாயை போல் இறந்து போவான்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வரும் அப்பாவி இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, அவர்களின் உயிருடன் விளையாடினால், அதனை செய்பவர்கள் மீது இடி விழும் என போதகர் சார்ள்ஸ் தோமஸ் தெரிவித்துள்ளார்.

இப்படியான செயலுடன் சம்பந்தப்படும் நபர் எந்த தரத்தில் இருந்தாலும் அவர் நாயை போல இறந்து போவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இருந்துக்கொண்டு வெறுமனே வீராப்பு பேசுவதில் அர்த்தமில்லை. ஆடையில் தான் கனவான் என்றும் பேச்சில் தனது சண்டித்தத்தையும் உலகத்திற்கு காட்டி பயனில்லை. அவை எதுவும் உண்மையில்லை.

உண்மையை எதிர்கொள்ளும் போது நாயை போல் செல்ல நேரிடும் என்பதை நான் தெளிவாக கூறுகிறேன். வீதியில் இறங்கி இருப்பவர்கள், வரலாற்றில் என்றுமே வீதியில் இறங்காதவர்கள் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.

பாதிப்புகள் காரணமாக சுயமாக வெளியில் இறங்கியுள்ள எமது பிள்ளைகளின் உயிர்களுடன் ஆயுதங்களுடன் கூடிய பலம் இருக்கின்றது என்று ஒருவர் ஆட்டம் போட முயற்சித்தால், அவர் மீது இடி விழும். பார்வோன் படையினருடன் நடு கடலில் நாயை போல சொத்து போனான்.

உலகில் பலமிக்க படை, பரிவாரங்கள் இருந்தும் பார்வோன் நாயை போல இறந்து போனான். இதனால், அப்பாவி பிள்ளைகளின் உயிர்கள் மீது கை வைக்கும் எந்த மன்னராக இருந்தாலும் நாயை போல் இறந்து போவான்.

இதனை நான் பொறுப்புடன் கூறுகிறேன். நான் எந்த அரசியல் அணியுடனும் சம்பந்தப்பட்டவன் அல்ல. நான் கடவுள் மீது நம்பிக்கை கொண்டவன். நாட்டில் புனிதமான சக்தி ஒன்று செயற்படும் போது போய் பிடித்து ஆட்டம் போவது போல் இருக்காது.

இதனால், இந்த நாட்டின் பிள்ளைகள் மீது கை வைக்க தயாராக வேண்டாம். நாங்கள் இன்னும் பேசிக்கொண்டு மாத்திரமே இருக்கின்றோம். ஏற்பட போகும் அழிகள் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய முறைகள் குறித்து தேவ நேசர்கள் எப்போதும் மன்னர்களுக்கு முன்னறிப்பு செய்தனர்.

நாங்களும் இந்த நாட்டின் மன்னர்களுக்கு போதுமான அளவுக்கு முன்னறிவிப்பு செய்து இருக்கின்றோம். ஏற்பட்டுள்ள நிலைமையை குறைத்து மதிப்பிட்டு, அழிந்து போய்விட வேண்டாம். இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை.

எனக்கு கூற வேறு வார்த்தைகள் இல்லாததால் கூறுகிறேன். புனிதமான சக்தியுடன் போரிடுவது மக்களுடன் போரிடுவது போல் இருக்காது”  எனவும் போதகர் சார்ள்ஸ் தோமஸ் எச்சரித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.