இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி : ரணில், பொன்சேகா உள்ளிட்ட ஐவரின் பெயர் பரிந்துரை

தற்போதைய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பல ஐரோப்பிய இராஜதந்திர தலைவர்களை சந்தித்து, தற்போது நிலவும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்போது இடைக்கால அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பதவிக்காலம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
10 உறுப்பினர்களுக்கு மிகையாகாமல், சிரேஷ்ட மற்றும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை குறித்தும் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.