நுவரெலியா வசந்த கால விழாவை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நுவரெலியாவில் இடம்பெற்றுவரும் வசந்த கால விழாவிற்கு வருகை தருவோருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட் 1 கிலோ 654 கிராம் கஞ்சாவுடன் றாகல தோட்டத்தில் வைத்து சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிக தகவலைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம்..ஹேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இச்சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ராகல பொலிஸாரும் நுவரெலியா விசேட பொலிஸ் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை