தலவாக்கலையில் தங்கக் காதணிகளுக்காக மூதாட்டி படுகொலை!

வீட்டில் தனியாக இருந்த 84 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது தங்கக் காதணிகளையும் கொலையாளி எடுத்துச் சென்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட வடமத்திய கும்புர தோட்டத்தின் NC பிரிவில் வசிக்கும் அம்மாயி மூக்காயி என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வட்டகொட பிரதேசத்தில் நேற்று(08) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மூன்று பிள்ளைகளின் தாயான இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அப்போது வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர் அவரைக் கொன்று அவர் அணிந்திருந்த ஒரு ஜோடி தங்க காதணிகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.