அடுத்த ஆறு மாதங்களில் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவை- வரிகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்,அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்- நிதியமைச்சர் ரொய்ட்டருக்கு பேட்டி

அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக வரிகளைஅதிகரிக்கவேண்டும் ,அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்,இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும், நீங்கள் இதனை செய்யவேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவவேண்டும் இது எங்கள் முன்னால் உள்ள தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார் எரிபொருள் மருந்துகள் உட்பட அத்தியாவசியபொருட்களை பெறுவதற்கும் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கும் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி அடு;த்த ஆறு மாதங்களிற்கு தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி சனிக்கிழமை தெரிவித்துள்ளார். 22 மக்களை கொண்ட இலங்கை தீவு தொடர்ச்சியான மின்துண்டிப்பு மருந்துகள் எரிபொருள் உட்பட ஏனைய பொருட்களிற்கு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை சீற்றமடைந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிக்கொண்டுவந்துள்ளதுடன் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்களை திணித்துள்ளது. இது மிகவும் கடினமான சவால் என நிதியமைச்சர் அலி சப்ரி ரொய்ட்டருக்கு தெரிவித்தார். நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ரொய்ட்டருக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைக மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகி வரும் நிலையில் 3 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதையே அவர் மிகவும் கடினமான விடயம் என குறிப்பிட்டார். அரசாங்கம் சர்வதேச பிணைமுறியை மறுசீரமைக்க முயலும், பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்துவதை நிறுத்திவைப்பதற்கான அனுமதியை கோரும்- ஜூலையில் செலுத்தவேண்டிய 1 பில்லியன் டொலருக்காகபிணைமுறிதாரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து அரசாங்கம் நம்பிக்கையுடன் காணப்படுகின்றது. பலவருடங்கள் கடன்களை திருப்பி செலுத்தாத நிலையை தவிர்க்கவே இந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்கின்றோம் அவ்வாறன நிலையின் விளைவுகளை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து எரிபொருளிற்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் இது ஐந்து வார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக காணப்படும் என தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கி உலக வங்கி நட்புநாடுகளிடமும் அரசாங்கம் உதவியை நாடும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கிருக்கின்றோம் என்னநிலையி;ல் இருக்கின்றோம் என்பது தெரியும் இந்த நிலைமைக்கு எதிராக போராடுவதை தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக வரிகளைஅதிகரிக்கவேண்டும்,அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டியிருக்கும்,இந்த நடவடிக்கைகளிற்கு மக்கள் ஆதரவளிக்கப்போவதில்லை ஆனால் நாடு தற்போதைய நிலையிலிருந்து மீள்வதற்கு இதனை செய்தே ஆகவேண்டும், நீங்கள் இதனை செய்யவேண்டும் அல்லது நிரந்தரமாக தோல்வியை தழுவவேண்டும் இது எங்கள் முன்னால் உள்ள தெரிவு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.