ஒருபோதும் இலங்கையை விட்டு வெளியேறமாட்டேன்! திட்டவட்டமாக அறிவித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

ஒருபோதும் தாம் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போது தன்மீது தம்மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம், எப்போதும் வெறுக்கத்தக்க குற்றச்சாட்டுக்களை அமைதியான, கண்ணியமான மற்றும் தொழில்முறை முறையில் கையாண்டமை அனைவருக்கும் தெரியும் என்றும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஏனைய ஆளுநர்களைப் போன்று பதவி விலகிய பின்னர் வெளியேறப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 18ஆம் திகதி வரை கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அத்துடன் அவரை ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேலதிக நீதவான் அறிவித்தலை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.