தாயுடன் சென்ற நான்கு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட விபரீதம்

நெலுவ பிரதேசத்தில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலேகெதர வீதியின் குறுக்கே நிரம்பி வழியும் இன்கல் ஓடையின் ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது தாயுடன் நான்கு பிள்ளைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒரு சிறுவன் மாத்திரம் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 08 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.