சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ……

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததிலேயே மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 39 வீடுகள் முழுமையாகவும், 82 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.