காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

 
பிரதமர் ஊடக பிரிவு
We also welcome the opportunity to answer your questions, offer more resources and work with you on this news item

Thank you for your consideration.

Geethanath Kassilingam
COORDINATING SECRETARY
THE PRIME MINISTERS OFFICE
Phone: +94112354818
Mobile: + 94777777314
Email: geethanath@pmoffice.gov.lk

Website: www.pmoffice.gov.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.