சாவகச்சேரியில் தனியார் பஸ் மோதி முதியவர் படுகாயம்

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் ஏ9 வீதியில் 12/04 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஏ9வீதியைக் கடக்க முற்பட்ட முதியவரை முல்லைத்தீவில் இருந்து யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் முதியவர் காலில் படுகாயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதில் கச்சாய் வீதி சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 66வயதான கு.சற்குணராசா என்பவரே இடது காலில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.