‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’: மூளைச் சாவடைந்த தமிழ் அகதி

‘ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாகும் இளம் அகதிகள்’: மூளைச் சாவடைந்த தமிழ் அகதி  

ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில் வாழ்ந்து வந்த தினேஷ் சந்தியாப்பிள்ளை எனும் 35 வயது ஈழத்தமிழ் அகதி மூளைச்சாவை அடைந்துள்ளதாக அரசியல் செயல்பாட்டாளரான அரன் மயில்வாகனம் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்று நாட்களாக கோமாவில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது 11 வயது மகனை பிரிந்து 10 ஆண்டுகளாகிறது என்றும் இவ்வாறு இளம் உயிர்கள் ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கைக்கு இரையாவதை காண மனம் ரணமடைகிறது என அரன் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சுமார் 30 ஆயிரம் அகதிகள் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.