காலி முகத்திடலில் ராபக்ஷக்களின் குரக்கன் சால்வையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குப்பைப் பைகள்!

காலி முகத்திடல் பேராட்டக்களத்தில் குப்பைகள் சேகரித்து வைத்திருக்கும் பைகளுக்கு ராஜபக்ஷ சகோதரர்கள் அணியும் குரக்கன் சால்வை அணிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவியில் இருந்து விலக கோரி நடத்தப்படும் இந்த போராட்டம் இன்று 7வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கனவே குப்பைகள் சேகரிக்கும் வாளிகளில் அரச தலைவர், பிரதமர் உட்பட சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தை நடத்தி வருபவர்கள், போராட்டம் நடத்தப்படும் இடத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து வெளியில் கொண்டு செல்ல தயாராக வைத்திருந்த பைகளிலேயே இவ்வாறு சால்வை கட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி குப்பைகள் கறுப்பு பைகளில் பொதி செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் அந்த பொதிகளுக்கு சிகப்பு நிற சால்வையை அணிவித்து, காலிமுகத் திடலில் வரிசையாக காட்சிக்கு வைத்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தில் கோட்டாபய ராஜபக்சவை தவிர ஏனையோர் குரக்கன் சால்வையை அணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.