சற்று முன்னர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.

முதலாம் இணைப்பு  

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

“நாளை காலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்” என இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வாரம் கட்டுவாப்பிட்டியில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரை தம்மிக்க பிரசாத் ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.