கல்வயல் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் பம்பி வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நிருபர்
2022ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற வரவு-செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கிராமத்திற்கு மூன்று மில்லியன் திட்டத்தின் கீழ் 22/04 வெள்ளிக்கிழமை தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்வயல் ஜே/305 கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகரசபையின் சுதந்திரக்கட்சி உறுப்பினர் ப.நந்தகோபால் தலைமையில் கல்வயலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கான வாழ்வாதார உதவிகளை கையளித்திருந்தனர்.
16விவசாயிகளுக்கு தலா 75,000 ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கருத்துக்களேதுமில்லை