குறைந்த விலை எரிவாயு சிலிண்டர்களால் நாளாந்தம் 250 மில்லியன்:ரூபா நஷ்டம் – லிட்ரோ

சந்தையில் வெளியிடப்படும் குறைந்த விலை எரிவாயு சிலிண்டர்கள் காரணமாக நாளாந்தம் சுமார் 250 மில்லியன் ரூபா வருமானம் இழக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ கேஸ் நேற்று அதன் விலையை 5,175/- ரூபாவாக அதிகரித்ததுடன், பின்னர் முடிவை மாற்றியமைத்தது.
இதேவேளை, 7,200 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு வரவுள்ளன, மேலும் ஏப்ரல் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் அந்தக் கப்பல்கள் இலங்கைக்கு வரும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரான விஜித ஹேரத் தெரிவித்தார்.
26ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் எரிவாயு கையிருப்பு மறுதினம் சந்தைக்கு வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.