கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு
நூருல் ஹுதா உமர்
கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் வழங்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமாகும். நலிவுற்ற நிலையில் இருக்கின்ற கலைஞர்களைப் பேணிக் காத்தல், போசணையளித்தல், பொருளாதார ஆற்றலை வளர்த்தல், அவர்களை கௌரவப்படுத்தல் தேசத்தின் கடமையும் அரசாங்கத்தின் பொறுப்புமாகும்.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் அய்மன் கலை மன்றம், சன்ரைஸ் கலை மன்றம், இஸ்லாமிய மரபுரிமைகள் கலாச்சார மன்றம், மீரா கோலாட்டக் குழு ஆகிய கலை மன்றங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் தலைமையில் வெள்ளிக் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் (மத்திய) திருமதி ஏ.எல். நௌபீஸா மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் (மாகாணம்) திருமதி வசந்தா ரன்ஞனி , கலாச்சார அதிகார சபை சார்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை