மரணித்தவரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார்!!

மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 26.04.2022 ஆந் திகதி காலை 7.30 மணியளவில் 60 தொடக்கம் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலைத் தொடர்ந்து, அங்கிருந்த பஸ் நடத்துனரினால் 1990 அவசர சேவை நோயாளர் காவு வண்டிக்கு  அழைப்பையேற்படுத்தியதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த அவசர சேவை நோயாளர் காவு வண்டி உத்தியோகத்தர்களினால் முதலுதவி வழங்கப்பட்டதனையடுத்து,  அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த வயோதிபர் கடந்த 27.04.2022 திகதி பி.ப 12.30 மணியளவில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் ஊர் மற்றும் பெயர் என்பன தெரியாத நிலையில் அடையாளம் காணப்படாத குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சடலத்தை இனங்கண்டுகொள்வதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிசார்  பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதுடன், மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.