ரமழானின் பலாபலன்கள் நாட்டு மக்களை நெருக்கடியில் இருந்து மீட்கட்டும்.

ரமழான் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் நாட்டு மக்கள் சகல நெருக்கடிகளில் இருந்தும் விடுபட வழிசமைக்கட்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.ரமழான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
ரமழான் மாதம் அருள் நிறைந்த நன்மைகள் அதிகம் செய்யும் மாதமாக கருதப்படுகிறது.”சுவர்க்கத்தின் வாசலைத் திறந்து நரகத்தின் வாயிலை அடைக்கும்” திறன் இம்மாதத்திற்கு உண்டு.
இறை தூதர் முகமது நபியின் போதனைகளைப் பின்பற்றி சகிப்புத்தன்மை,பொறுமை விட்டுக்கொடுப்பு ஆகிய நற்கருமங்களில் ஈடுபடும் மனோ நிலையை ரமழான் பண்டிகை ஏற்படுத்துகிறது.
பகல் முழுதும் பசித்திருந்து இரவு முழுவதும் வணங்கி நின்று பாவங்களைப் போக்கும் ரமழான் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் இவ்வுலக மக்கள் அனைவரும் நெருக்கடிகளில் இருந்து மீண்டு சுக வாழ்வு வாழ வழிசமைக்கும் என்ற நம்பிக்கையுடன்- அனைவர் வாழ்விலும் திரும்புமுனையை ஏற்படுத்தும் நன்நாளாக இந்நாள் அமைய வாழ்த்துகிறேன்.என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.