கோத்தா கோகமவில் 24 மணி நேரம் இயங்கும் மின் உற்பத்தி நிலையம்
காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு 24 மணிநேர நடமாடும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் நிலையத்தின் திறன் 6 கிலோ வாட் எனக் காட்டப்பட்டுள்ளது.
குறித்த நடமாடும் சூரிய சக்தி நிலைய வாகனம் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், போராட்ட களத்தின் கூடாரங்களில் வாழும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என்றும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை