தீக்கிரையாக்கப்பட்ட ராஜபக்சக்களின் உணவு விடுதி

தங்காலை மெடில்ல பிரதேசத்தில் ராஜபக்சக்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகத்துக்கும் ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்த தீ விபத்தில் உணவகத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் கடந்த திங்கட்கிழமை அரசாங்க ஆதரவு தரப்பினர்கள் ஏற்படுத்திய குழப்பம் வன்முறையாக மாறியது.

இதனால் பலர் கொல்லப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்து கொழுத்தப்பட்டது. மேலும், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அந்த வகையில், தங்காலை பெலியத்த வீதியிலுள்ள கார்ல்டன் கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், தங்காலை மெடில்ல பிரதேசத்தில் உள்ள ராஜபக்சக்களுக்கு சொந்தமான உணவகத்துக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.