“இனத்தை அழித்த எதிரி இடத்தை மறக்கும் வரை அடி” தமிழர் பிரதேசத்தை மையப்படுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

திருகோணமலை நகரின் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மையப்படுத்தி தமிழ் வாசகங்கள் எழுதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் திருகோணமலை நகரின் பிரதான இடங்களை மையப்படுத்தி தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்கக்கடியதாக இருந்தது.
இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில குறிப்பிடப்பட்டுள்ளதாவது பனிவிழும் இந்த இரவில் நடந்து படைத்தவன் மேல் பழியை எறிந்து விளம்பரம் மட்டும் விதைக்க நினைத்து விடைதெரியாத கூட்டம் நாங்கள், நெஞ்சத்தில் வஞ்சம் இலலை எங்களின் கூட்டம் வேறு… நேர்கொண்ட பார்வையில் இனி குற்றம் குடி கொள்ளாது, வேதன் உறைத்த வேதம் சில விலங்குகளுக்கு தெரியாது… காலம் கடந்த ஞானம் கலவரத்தால் விடை தேடு மற்றும் இனத்தை அழித்த எதிரி இடத்தை மறக்கும் வரை அடி என்ற வாசகங்கள் எழுதிய சுவரொட்டிகள் திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன
இவ்வாறு எழுதப்பட்டுள்ள சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள பிரதேசத்தை அண்டிய வீதிகளில் இலங்கை இராணுவத்தினரின் பிரதான சோதனை சாவடிகள் அமைத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.