எதிர்காலத்தில் அரசியல் செயற்பாடுகளுக்காக தனியார் பஸ்களைப் பயன்படுத்த அனுமதியில்லை -அஞ்சன பிரியன்ஜித்!

காலிமுகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஏறக்குறைய 40 பொது போக்குவரத்து பஸ்கள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பஸ் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில் கிட்டத்தட்ட 30 பேருந்துகள் தனியார் பேருந்துகள் என்றும், கூறப்படுகிறது
கொழும்பு பெரஹெர மாவத்தை பேராவே பிரதேசத்திலும் பித்தளை சந்திப் பகுதியிலும் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை சுமார் பத்து என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பல பேருந்துகள் பழுது பார்க்க முடியாத அளவுக்கு நாசமாகி உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்காலத்தில் எந்தவொரு தனியார் பஸ்ஸையும் அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட் டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித் துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.