அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை எவ்வாறு முறியடிப்பது – ஜனாதிபதி தீவிர பேச்சுவார்த்தை

 

அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிர்கட்சிகளின் முயற்சிகளை தோற்கடிப்பது எவ்வாறு என ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராய்ந்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணையை கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தோற்கடிப்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான ஆதரவை நாடாளுமன்றத்தில் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளார்.

முழுமையான அமைச்சரவை இன்னமும் பதவியேற்காத போதிலும்- பிரதமர் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் நிதியமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு பிரதமரே தலைமை வகிப்பார்.

இந்த இரண்டு தந்திரோபாயங்களும் வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் உறுதியான பெரும்பான்மை காணப்படுவது அவசியம், 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார் என ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிலிருந்து விலகிய 42 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளனர்-ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்கட்சிகளும் தாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளன.

எனினும் வெள்ளிக்கிழமை இரவு பின்கதவு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன – 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன- பதுளையை சேர்ந்த சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே தான் பிரதமருக்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி- சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

போதுமான உறுப்பினர்களை பெற முடியும் என நம்பிக்கை உள்ளது என பொதுஜனபெரமுனவின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார் ஆனால் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இதனை நிராகரித்தார்-

செவ்வாய்கிழமை வரை இந்த மர்மம் தொடரப்போகின்றது

 

சண்டே டைம்ஸ்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.